கிரிக்கெட் (Cricket)

அடிலெய்டு டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 213/8

Published On 2025-12-18 22:35 IST   |   Update On 2025-12-18 22:37:00 IST
  • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
  • அந்த அணியின் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார்.

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்னும், கவாஜா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஹாரி புரூக் ஜோடி அணியைக் காப்பாற்ற போராடியது. 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஹாரி புரூக் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசியில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

இறுதியில், 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 158 ரன்கள் பின்தங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News