கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: இன்று இறுதிப்போட்டி- அரியானா, ஜார்க்கண்ட் மோதல்

Published On 2025-12-18 02:54 IST   |   Update On 2025-12-18 02:54:00 IST
  • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
  • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

புனே:

உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1ல் மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல் பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன.

இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன் முடிவில் ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News