கிரிக்கெட் (Cricket)

வீடியோ: விஜய் பாடலுடன் ஜடேஜாவை வரவேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2025-11-15 12:14 IST   |   Update On 2025-11-15 12:14:00 IST
  • மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
  • சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.

சென்னை:

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. இந்த நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. இதனை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது அதன்படி 'பிகில்' படத்தில் விஜய்யின் இன்ட்ரோ ஸ்டைலில் ஜடேஜா அந்த வீடியோவில் வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News