கோலி, ரோகித் சர்மாவின் ரூ.7 கோடிக்கான கிரேடு நீக்கம்: பிசிசிஐ முடிவு
- 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
- ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.