ஐ.பி.எல்.(IPL)

அரை சதத்தில் சதம்: புதிய சாதனை படைத்த விராட் கோலி

Published On 2025-04-14 00:17 IST   |   Update On 2025-04-14 00:17:00 IST
  • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
  • விராட் கோலி அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

ஜெய்ப்பூர்:

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.

பெங்களூரு சார்பில் ஹேசில்வுட், குருணால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பில் சால்ட் 65 ரன்னும், விராட் கோலி 62 ரன்னும், படிக்கல் 40 ரன்னும் அடித்தனர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்தார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

Tags:    

Similar News