IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
ரூ. 75 லட்சம் அடிப்படை விலையில் பட்டியலிடப்பட்ட இலங்கை வீரர் பதும் நிசங்காவை ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.
அன்கேப்ட் பிளேயர்களான விக்னேஷ் புதுர் (ரூ.30 லட்சம்), யாஷ் ராஜ் புஞ்சா (ரூ.30 லட்சம்), சுஷாந்த் மிஸ்ரா (ரூ.90 லட்சம்) ஆகியோரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் பிரசாந்த் சோலங்கியை ரூ.30 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி அவரது அடிப்படை விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடிக்கு ஏலம் போனார். இவரை லக்னோ அணி வாங்கியது.
ராஜஸ்தானை சேர்ந்த அசோக் சர்மா தனது அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சத்திற்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.
தேஜஸ்வி சிங் (அன்கேப்ட் பிளேயர்) அவரது அடிப்படை விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான முகுல் தலிப் சவுத்ரியை அடிப்படை விலை 30 லட்சத்தில் இருந்து ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி.
ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.
பிரஷாந்த் வீர் (அன்கேப்ட் பிளேயர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி வாங்கியது.
இந்திய வீரர் ஆகிப் நபி தர் (அன்கேப்ட் ஆல்ரவுண்டர்) அடிப்படை விலை 30 லட்சத்தில் இருந்து ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.