IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆன்ரிக் நோர்க்யாவை (Anrich Nortje) ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இலங்கை வேகப்பந்து வீச்சார்ளர் பத்திரனாவை கொல்கத்தா அணி ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி, தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் இந்திய வீரர் ஆகாஷ் தீப், சிவம் மாவி, ஆகியோர் ஏலம் போகவில்லை.
தீபக் ஹூடா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜானி பேர்ஸ்டோவ், குர்பாஸ், கேஎஸ் பரத் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் பின் ஆலனை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்டர் குயிண்டன் டி காக்கை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே கடும் போட்டி நடந்தது. இதில் ஆர்சிபி அணி வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை லக்னோ அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.