null
IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
- கொல்கத்தா அணி ரூ.64 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
- சென்னை அணி ரூ.43 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்
சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.
ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜாஷ் இங்லிஸை ரூ.8.60 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பென் துவார்ஷுஸை ரூ.4.40 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளார் ராகுல் சாஹரை ரூ.5.20 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளார் ஷிவம் மாவியை ரூ.75 லட்சத்திற்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளார் மேட் ஹென்றியை ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளார் ஆகாஷ் தீப்பை ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.