ஐபிஎல் 2025: 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான்
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சண்டிகர்:
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.