ஐ.பி.எல்.(IPL)
null

IPL 2025: ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி- கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை, ஆர்சிபி-க்கு எதிராக சென்னை

Published On 2025-04-01 11:14 IST   |   Update On 2025-04-01 11:18:00 IST
  • மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
  • ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா 116 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 12-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதில் பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு மைதானத்தில் குறிப்பிட்ட ஒரு அணியை அதிக முறை வீழ்த்திய சாதனையை மும்பை படைத்துள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி 24 வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 21 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News