ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-04-20 19:09 IST   |   Update On 2025-04-20 19:15:00 IST
  • சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதுகிறது.

5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சி யாக தோற்றது.

தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

இதற்கிடையே, சி.எஸ்.கே. எஞ்சி இருக்கும் 7 போட்டியில் 6-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.

இதனால் மும்பையை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானது. மும்பையை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Tags:    

Similar News