சிஎஸ்கே-வுக்கு வந்த சோதனை: சேப்பாக்கத்தில் 2010-க்குப் பிறகு டெல்லியிடம் சரண்..!
- மும்பைக்கு எதிரான தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது.
- ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்ட நிலையில், தற்போது டெல்லிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.
பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.
3ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் விஜய் சங்கர் களம் இறங்கினார். கடைசி நின்று 54 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி வரை விளையாடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மேலும், டோனியும் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் 30 ரன்களே அடித்தார்.
ரச்சின் ரவீந்திரா (3), கான்வே (13), ருதுராஜ் கெய்க்வாட் (5) ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.
டெல்லி அணி கடந்த 2010ஆம் ஆண்டு கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக ஆர்சிபி 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போது டெல்லி அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது.
சிஎஸ்கே கடந்த 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் 28ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்திருந்தது. இன்று டெல்லிக்கு எதிராக 25 ரன்னில் தோல்வியை சந்தித்துள்ளது.
கவுகாத்தில் 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 6 ரன்னில் தோல்வியடைந்தது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.