ஐ.பி.எல்.(IPL)

கோலி ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம்- பொங்கி எழுந்த ஏபி டிவில்லியர்ஸ்

Published On 2025-05-06 14:47 IST   |   Update On 2025-05-06 14:47:00 IST
  • விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.
  • சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் வெளியேறி உள்ளது. மீதமுள்ள 7 அணிகள் 4 இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் விராட் கோலியின் ஸ்ரைக் ரேட் குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் மீடியாவிலும் அதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியது.

இந்நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் Mr. Safety என அந்த அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருந்தார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.

நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் விராட் மிகவும் மெதுவாக விளையாடுகிறார் என கூறும்போது ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், சமீபத்தில் சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

Tags:    

Similar News