கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம்: டோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
- எம்.எஸ். டோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் அடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் 44 போட்டிகளில் விளையாடி 7 சதம் அடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 7ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனி 6 சதம் அடித்துள்ளார். இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
எம்.எஸ். டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4876 ரன்கள் அடித்துள்ளார். 33 அரைசதம் அடித்துள்ளார்.
ரிஷப் பண்ட் இந்த போட்டிக்கு முன்னதாக 43 போட்டிகளில் 75 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2948 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதம், 15 அரைசதம் அடங்கும். தற்போது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.