கிரிக்கெட் (Cricket)

கவுகாத்தியில் இந்திய வீரர்களுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு: வீடியோ வெளியிட்ட பிசிசிஐ

Published On 2025-11-20 15:23 IST   |   Update On 2025-11-20 15:23:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
  • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் நேற்று கவுதாத்திக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

Tags:    

Similar News