VIDEO: கம்பீரை கலாய்த்த ரசிகர்கள்- விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் வைரல்
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
- இந்த தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகள் முறையே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுத் தோல்வி இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக " கவுதம் கம்பீர் ஹே ஹே" என முழக்கமிட்டனர். இதைக் கேட்டு விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் திகைத்து நின்றனர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2024-ல் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.