பிக்பாஷ் லீக்: 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த் ஸ்கார்சர்ஸ்
- பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
பெர்த்:
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் 15 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் மாலி பேர்ட்மேன் 3 விக்கெட்டும், டேவிட் பைன், கூப்பர் கன்னோலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.