WPL 2026: பாதியில் விலகிய மும்பை வீராங்கனை- மாற்று வீராங்கனை யார் தெரியுமா?
- மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக விலகி உள்ளார்.
- மும்பை அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா மும்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.
2025-ம் ஆண்டு இந்தியாவின் ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 5 டி20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.