கிரிக்கெட் (Cricket)

அவமானமாக இருக்கும்.. விராட் கோலி ஓய்வு குறித்து பேசிய இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ்

Published On 2025-05-22 10:27 IST   |   Update On 2025-05-22 10:27:00 IST
  • விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
  • இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா 5 டெஸ்டில் விளையாடுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இந்நிலையில், "விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்று நினைப்பதை நான் அவமானமாக கருதுகிறேன்" என்று மெசேஜை கோலிக்கு அனுப்பியதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஸ்டோக்ஸ், "இந்த முறை விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்பது எனக்கு அவமானமாக இருக்கும் என்று நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். கோலிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் நாங்கள் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருப்பதால் நாங்கள் எப்போதும் போட்டியை ரசித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News