லாதம், ரவீந்திரா அசத்தல் சதம்: 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 417/4
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்167 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார்.
64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்தின் கான்வே 37 ரன்னிலும், வில்லியம்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம்-ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்தது. அந்த அணி இதுவரை 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.