கிரிக்கெட் (Cricket)

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார்?: பரிந்துரை பட்டியல் வெளியிட்ட ஐசிசி

Published On 2025-12-05 19:44 IST   |   Update On 2025-12-05 19:44:00 IST
  • நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் இடம்பெற்றுள்ளார்.
  • நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

துபாய்:

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் சிமோன் ஹார்மர், பாகிஸ்தானின் முகமது நவாஸ், வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தாய்லாந்தின் திபாட்சா புத்தவோங், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈஷா ஒசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News