கிரிக்கெட் (Cricket)

இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய நியூசிலாந்து- 208 ரன்கள் குவிப்பு

Published On 2026-01-23 20:58 IST   |   Update On 2026-01-23 20:58:00 IST
  • நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
  • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, டிம் சீஃபர்ட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய கான்வே, அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசினார்.

9 பந்துகள் சந்தித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டிம் சீஃபர்ட் 24 ரன்னில் வெளியேறினார்.

அதனை தொடர்ந்து பிலிப்ஸ் 19, டேரில் மிட்செல் 18, சாப்மேன் 10 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் வந்த கேப்டன் சாட்னர் 27 பந்தில் 47 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News