கிரிக்கெட் (Cricket)

3வது டி20 போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

Published On 2026-01-23 02:32 IST   |   Update On 2026-01-23 02:32:00 IST
  • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.

துபாய்:

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 47 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டு 27 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அதிரடியாக ஆடி 71 ரன்கள் குவித்தார். இப்ராகிம் ஜட்ரன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கல் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஸ்பிரிங்கர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News