கிரிக்கெட் (Cricket)

ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 3-வது ஆப்கானிஸ்தான் வீரர்- முஜிபுர் ரகுமான் சாதனை

Published On 2026-01-22 11:01 IST   |   Update On 2026-01-22 11:01:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

துபாய்:

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவருக்கு முன்பு 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கானும் 2023-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக கரீம் ஜனட் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

Tags:    

Similar News