கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

Published On 2026-01-22 01:24 IST   |   Update On 2026-01-22 01:24:00 IST
  • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.

துபாய்:

ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. டார்விஷ் ரசூல் 68 ரன்னும், செதிகுல்லா அடல் 53 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 17 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News