கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து 2 வீராங்கனைகள் விலகல்

Published On 2026-01-23 20:32 IST   |   Update On 2026-01-23 20:32:00 IST
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
  • இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர்.

பேட்டர் தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரையும் தலா 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

டெல்லி அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நாளை ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. 27-ந்தேதி குஜராத் அணியையும், பிப்ரவரி 1-ந்தேதி உ.பி. வாரியர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News