சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து.. தீவிர வலை பயிற்சியில் ரோகித்.. வைரலாகும் வீடியோ
- நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இந்த தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசதுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வலை பயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் நியூசிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார்.
இதனால் தீவிர வலைபயிர்ச்சியில் ரோகித் ஈடுப்பட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.