கிரிக்கெட் (Cricket)
null

வேலூர் TO நியூசிலாந்து... இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக்

Published On 2026-01-11 16:15 IST   |   Update On 2026-01-11 22:03:00 IST
  • 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
  • இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுகிறது. நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள 23 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.

2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News