நெட் பவுலர்களுடன் உரையாடிய விராட் கோலி: உத்வேகம் அளிக்கக்கூடிய டிப்ஸ் வழங்கும் வீடியோ வைரல்
- இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது.
- இந்த போட்டிக்காக விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வதோதராவில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வதோதராவைச் சேர்ந்த இளம் பந்து வீச்சாளர்கள் நெட் பவுலர்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விராட் கோலிக்கு நன்றாக பந்து வீசினர். அவர்கள் பந்து வீச்சில் விராட் கோலி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார்.
தனக்கு பந்து வீசிய இளைஞர்களுக்கு கையெழுத்திட்ட பந்துகளை வழங்கினார். அத்துடன் உத்வேகம் அளிக்கும் வகையில் டிப்ஸ் வழங்கினார்.
நெட் பவுலர்களுடன் உரையாடிய விராட் கோலி "ஒரு பந்து வீச்சாளராக எனக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தானாகவே எதையும் செய்யாமல், நான் தவறு செய்வதற்காகவோ அல்லது பந்து தானாகவே அடிக்கும் வகையில் வருவதற்காக காத்திருந்தால், அப்போது பந்து வீச்சாளருக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அதனால், ரன்கள் விட்டுக் கொடுத்தால் அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், அதை தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். நான் வீச விரும்பும் பந்தைத்தான் நான் வீசுவேன். ஒரு பேட்ஸ்மேன் விரும்பும் பந்தை நான் வீசப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.