கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து தொடக்க ஜோடி அரைசதம்

Published On 2026-01-11 15:13 IST   |   Update On 2026-01-11 15:13:00 IST
  • நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க தவறினார்.
  • இருவரும் 60 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.

இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.

நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Tags:    

Similar News