2027 ICC ODI World Cup: கோலி, ரோகித்துடன் ஆலோசிக்க பிசிசிஐ முடிவு
- இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.