புதுச்சேரி

72 நாட்களுக்குப் பிறகு! புதுச்சேரிக்கு புறப்பட்ட த.வெ.க. பரப்புரை வாகனம்

Published On 2025-12-08 17:24 IST   |   Update On 2025-12-08 17:24:00 IST
  • புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • பரப்புரை வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இந்த நிலையில், காவல்துறையின் அனுமதியுடன் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.

முன்னதாக விஜயின் பிரச்சார வாகனம் இன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயின் பரப்புரை வாகனம் வெளியே வந்தது. அதன்படி, இன்று மாலையே பரப்புரை வாகனம் புறப்பட்டுள்ளது.

அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News