இந்தியா

ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார் - உக்ரைன் தூதர் தகவல்

Published On 2025-08-24 13:01 IST   |   Update On 2025-08-24 13:01:00 IST
  • ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்
  • பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்

உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷிய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே, உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News