இந்தியா

சகோதரன் கண்முன்னே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்

Published On 2025-10-12 12:20 IST   |   Update On 2025-10-12 12:20:00 IST
  • பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
  • சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.

கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News