அஜித் பவாருடன் விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்!
- விபத்தில் அஜித் பவார், அவரது பாதுகாவலர் விதீப் யாதவ் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
- அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, மும்பையில் இருந்து விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பாகத் தனது தந்தை சிவகுமார் மாலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பிங்கி தனது தந்தையிடம், "அப்பா, நான் இப்போது அஜித் பவாருடன் பாராமதிக்குச் செல்கிறேன். அவரை அங்கே இறக்கிவிட்டு, பிறகு நந்தேடுக்குச் செல்வேன். நாம் நாளை விரிவாகப் பேசலாம்" என்று கூறியுள்ளார்.
அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், அந்த நாளை இனி ஒருபோதும் வராது என்று அவரது தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.