இந்தியா

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: பெற்றோரை மயக்க ஊசி செலுத்தி கொலை செய்த நர்ஸ்..!

Published On 2026-01-28 20:03 IST   |   Update On 2026-01-28 20:03:00 IST
  • காதலனை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
  • மயக்க ஊசி செலுத்தி கொலை செய்து நாடகமாடியது அம்பலம்.

காதலன் மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நர்ஸ் தனது போற்றோரை மயக்க ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் 23 வயதைச் சேர்ந்த பெண், நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அவர் வேறு சாதியை சேர்ந்தவர்.

இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் வேறு சாதி பையனை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரை தீர்த்துக்கட்டினால் மட்டுமே, காதலனை திருமணம் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதனால் தான் பணிபுரியும் மருத்துவமனையில் இருந்து மயக்க மருந்து மற்றும் ஊசி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர், தனது பெற்றோரிடம் நைசாவ பேசி தங்களுடைய வலி நிவாரணத்திற்கான ஊசி போடுகிறேன் என்று சொல்லி மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். அதிக டோஸ் செலுத்தியதால் பெற்றோர்கள் மயக்க நிலையிலேயே உயிரிழந்தனர்.

பின்னர் தனது சகோதரருக்கு போன் செய்து, விவசாயக் கடன் கட்ட முடியாததால் பெற்றோர் உயிரிழந்ததாக கூறியுள்ளார். ஆனால், சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட, போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோரை கொலை செய்ததை நர்ஸ் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Similar News