இந்தியா
null

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு - ராகுல் காந்தி இரங்கல்

Published On 2026-01-28 12:22 IST   |   Update On 2026-01-28 13:12:00 IST
  • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
  • அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், அஜித் பவார் மரணத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மகாராஷ்டிர துணை முதல்வர் ஸ்அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இன்று விமான விபத்தில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த துயரமான தருணத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த துக்க நேரத்தில் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News