விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
- அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
- விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் பவாருடன் எடுத்து புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அஜித் பவார் அவர்கள் அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பைக் கொண்ட ஒரு மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். மகாராஷ்டிர மக்களின் சேவைக்கு முன்னணியில் நின்று உழைக்கும் ஒருவராக அவர் பரவலாக மதிக்கப்பட்டார். நிர்வாக விஷயங்களில் அவர் கொண்டிருந்த புரிதலும், ஏழை எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது பேரார்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.