இந்தியா
null

விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

Published On 2026-01-28 09:51 IST   |   Update On 2026-01-28 10:03:00 IST
  • பாராமதி விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
  • தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

பாராமதி விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

இன்று காலை 8.45 மணிக்கு அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News