இந்தியா

தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

Published On 2026-03-15 16:25 IST   |   Update On 2026-03-15 16:25:00 IST
  • தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
  • தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் ஆகும்.

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த 5 மாநிலத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசு திட்டங்கள் ஏதும் அறிவிக்க முடியாது. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அதன் செலவு கட்சி மற்றும் வேட்பாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Tags:    

Similar News