இந்தியா
VIDEO: எய்ம்ஸ் மருத்துவமனை Lift-இல் பெண் ஊழியரின் செயினை பறித்துச் சென்ற இளைஞர்
- அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
- அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.
மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார்.
அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.