இந்தியா

ஆதாரில் மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே அப்டேட் செய்யலாம் - UIDAI அறிவிப்பு

Published On 2026-01-28 17:44 IST   |   Update On 2026-01-28 17:44:00 IST
  • அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஆதார் சேவை மையத்தில், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது

இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான்கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் UPDATE செய்துகொள்ளும் அம்சத்தை UIDAI அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஆதார் சேவை மையத்தில், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது

ஆதார் செயலியின் மூலம் பயனர்கள் இனிமேல் எளிதாக மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள முடியும். இன்றிலிருந்து இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. 

Tags:    

Similar News