இந்தியா

பாஜக கூட்டணியில் இருந்து விலக இருந்த நிலையில்... அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா

Published On 2026-01-28 14:51 IST   |   Update On 2026-01-28 14:51:00 IST
  • விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
  • அஜித் பவார் மரணத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 3 பேரும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடைம் பேசிய மம்தா பானர்ஜி, "பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன? அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்"

Tags:    

Similar News