இந்தியா
சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம்
- 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்
பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ மத்திய அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.100, ரூ.500 நோட்டுக்களை கொடுத்து ரூ.10, ரூ.20, ரூ..50 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்கவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மும்பையில் அதிகப்படியான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.