என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்லறை"

    • 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்

    பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ மத்திய அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரூ.100, ரூ.500 நோட்டுக்களை கொடுத்து ரூ.10, ரூ.20, ரூ..50 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்கவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மும்பையில் அதிகப்படியான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    • கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலமம் கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார்.

    கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர், கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருட்டு நடந்த சம்பவம், மறுநாள் கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தபிறகே தெரியவந்தது.

    பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதர்ச்சியடைந்த அவர்கள், கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கடையில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த 4 கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வதும், அந்த நபர் கடையின் உள்ளே டேபிளிள் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை தனியாக எடுத்து டேபிளில் வைத்து விட்டு, சில்லறை காசுகளை மட்டும் திருடிச்சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுவாக திருட்டில் ஈடுபடக்கூடிய நபர்கள், திருடச்செல்லும் இடத்தில் பணம் மற்றும் அதிக விலை உள்ள பொருட்கள் சிக்கினால் அவற்றை விட்டு வைப்பதில்லை.

    அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் கொல்லம் கடைகளில் கை வரிசை காட்டிய நபரோ, வித்தியாசமாக பணக்கட்டுகளை வைத்துவிட்டு சில்லறை காசுகளை மட்டும் திருடிச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×