இந்தியா

கள்ளக்காதலால் விபரீதம்- மருமகனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்

Published On 2026-01-29 09:48 IST   |   Update On 2026-01-29 09:48:00 IST
  • நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார்.
  • இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்த தண்டாவை சேர்ந்தவர் ராமாவத் ரவி (வயது 34). இவர் சல்குனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர்.

லட்சுமிக்கு அவரது கணவரின் சகோதரி மகன் கணேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என லட்சுமியை பலமுறை கண்டித்தனர்.

இருப்பினும் லட்சுமியின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக லட்சுமி தனது மருமகன் கணேஷ் உடன் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இது சம்பந்தமாக கடந்த 26-ந்தேதி காலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமி மிரியாலகுடாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் லட்சுமி கணவர் வீட்டிற்கு வந்தார்.

அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கவனித்த ரவியின் தந்தை லட்சுமண நாயக் இது வழக்கமாக ஏற்படும் தகராறு என தூங்கிவிட்டார்.

லட்சுமி நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர்.

காலையில் ரவியின் தந்தை லட்சுமண நாயக் எழுந்து பார்த்தபோது மகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து லட்சுமண நாயக் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமி தனது மருமகன் கணேஷுடன் மிரியாலகுடா போலீசில் சரணடைந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News