இந்தியா

பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் - பினராயி விஜயன்

Published On 2025-09-11 16:21 IST   |   Update On 2025-09-11 16:21:00 IST
  • ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
  • இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.

ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News