இந்தியா

ரீல்ஸ் மோகம்... 300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த கல்லூரி மாணவன் உயிர் பிழைத்த அதிசயம்

Published On 2025-07-12 12:41 IST   |   Update On 2025-07-12 12:41:00 IST
  • கல்லூரி மாணவன் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளார்.
  • படுகாயமடைந்த கல்லூரி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்த கல்லூரி மாணவன் சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் காருடன் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் 300 அடி பள்ளத்தில் விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News