இந்தியா

Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

Published On 2026-02-01 09:36 IST   |   Update On 2026-02-01 14:15:00 IST
2026-02-01 06:34 GMT

மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது. மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைப்பு. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்!

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2026-02-01 06:30 GMT

நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி நிறைவேற்றம். மாநிலங்களுக்கான மானியமாக ரூ. 1.4 லட்சம் கோடி அளிக்கப்படும். புதிய வருமான வரி சட்டம் வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது!

2026-02-01 06:28 GMT

2 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வறுமையில் உள்ள மக்களுக்கான சிகிச்சை வசதிகள் 50% அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

2026-02-01 06:25 GMT

சிறு விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவி. சந்தனம், தேங்காய், முந்திரி உயர்ரக பயிர் விவசாயிகளுக்கு உதவி. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

2026-02-01 06:20 GMT

பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2026-02-01 06:18 GMT

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் மலை ரெயில் சேவை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2026-02-01 06:17 GMT

3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும். 15 ஆயிரம் இடைநிலை பள்ளிகளில் கற்பனை திறன் சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

2026-02-01 06:13 GMT

AI, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுத்த ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tags:    

Similar News