இந்தியா

Union Budget 2026: வரி குறித்து பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்...

Published On 2026-02-01 12:20 IST   |   Update On 2026-02-01 12:20:00 IST
  • வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.

புதுடெல்லி:

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வரி குறித்து இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.

* வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

* வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை கிடையாது.

* வருமான வரி கணக்கு, மறு ஆய்வுக்கு பிறகும் ரிட்டர்ன் தொடர்பாக மறுமுறை விண்ணப்பிக்கலாம்.

* வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.

* மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.

* குறைந்த அளவில் வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.

Tags:    

Similar News